பெண்ணை தீ மூட்டி கொளுத்தி கொன்ற கொடூரம்..! யாழில் பரபரப்புச் சம்பவம்
[2024-06-02 07:28:18] Views:[9]
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் குடும்ப பெண் ஒருவரின் தலை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (01) பிற்பகல் குருநகர் பகுதியில் அமைந்துள்ள கொஞ்சேஞ்சி மதா சேமக்காலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :
சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இ. பவானி (வயது 45) எனும் குடும்ப பெண்ணை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ் குருநகர் புனித பத்திரிசியார் கல்லூரி வீதி ஊடாக குருநகர் கொஞ்சேஞ்சி மதா சேமக்காலைக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண்ணின் தலை மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை சிகிச்சைக்காக யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சையின் போது அவர் உயரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










