குறைந்தது எரிபொருள் விலை :
[2024-06-01 13:39:11] Views:[9]
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ நிறுவணம் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் அந்நிறுவனத்தின் மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதும், இரண்டின் விலையில் மாற்றங்கள் ஏதும் ஏற்டுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 355 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
420 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோலின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதே விலை நடைமுறையில் உள்ளது,
ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
377 ரூபாவாக இருந்த சிலோன் சுப்பர் டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதே விலை நடைமுறையில் உள்ளது,
மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 202 ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.










