ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு : தேடப்பட்டுவந்த தமிழர் கொழும்பில் கைது..!
[2024-06-01 13:36:55] Views:[10]
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும் வழிநடத்தியதாக கூறப்பட்டு தேடப்பட்டுவந்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒஸ்மான் புஷ்பராஜ் ஜெரார்ட் என்ற குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (31) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக இவரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










