yarlathirady.com

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரணையில் யாழில் செயற்கை கால் பொருத்தும் முகாம்!

[2024-06-01 13:34:35] Views:[12]

இந்திய துணைக் தூதரகத்தின் அனுசரணையில் செயற்கை கால் பொருத்தும் முகாம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இலவசமாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் நடைபெறுவதால் உதவி தேவையானவர்கள் உடன் விண்ணப்பிக்குமாறு யாழ் இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜூன் 4முதல் 20 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள மாவட்ட முகாமைத்துவ திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தில் குறித்த செயற்கை கால் பொருத்துதல் முகாம் இடம்பெற உள்ளது.

இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் பகவான் மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி (BMVSS), ஜெய்ப்பூர் ஃபுட் இந்தியாவுடன் இணைந்து இந்த முகாமை நடத்தப்படுகிறது.

இதன் மூலம் வடமாகாணத்தைச் சேர்ந்த 350 பயனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள், மற்றும் மகளிர் விவகார மற்றும் சமூக சேவை அமைச்சின் அலுவலகங்களின் ஆதரவுடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பதிவு செய்யாத மற்றும் இச்சேவைகளைப் பெற ஆர்வமுள்ளவகள் யாழ்ப்பாணம் மகளிர் விவகார மற்றும் சமூக சேவை அமைச்சுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

உடல் ஊனமுற்றோரின் உடல் மற்றும் சமூக, பொருளாதார மறுவாழ்வுக்காக செயல்படும் இந்திய அரச சார்பற்ற நிறுவனமான பகவான் மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி மூலம் நடத்தப்படும் இந்த முகா த்திற்கு இந்திய அரசாங்கம் ஆதரவினை வழங்கியுள்ளது.

ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், செயற்கை கால்கள் மற்றும் பிற தொடர்புடைய உதவிகளைப் பொருத்துவதில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலகின் மிகப்பெரிய அமைப்பாகும் அவ்வமைப்பினூடாக குறித்த வேலைத்திட்டத்திற்கு தேவையான செயற்கை கால்கள் வழங்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.