கடல் ஆமை இறைச்சியை மன்னாரில் இருந்து யாழிற்கு கடந்த முயன்ற இருவர் கைது..!
[2024-05-31 07:21:08] Views:[10]
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பள்ளமடு வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான வாகனத்தை சோதனை செய்த போது கடலாமை இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதை கொண்டு சென்ற இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










