சிறுமியை தூக்கி செல்லமுயன்ற ராட்சத பருந்தால் பெரும் பரபரப்பு..!
[2024-05-30 11:35:10] Views:[11]
பொலனறுவை பிரதேசத்தில் இராட்சத பருந்து ஒன்று முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த இராட்சத பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்று முன்தினம் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென வந்த பருந்து துக்கி செல்ல முயன்றபோது அதனை கண்ட தந்தை கூக்குரலிட்டதை அடுத்து பருந்து சிறுமியை போட்டு விட்டு சென்றுள்ளது.
பருந்து தூக்கியதில் காயமடைந்த சிறுமி பொலனறுவை மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வீடுதிரும்பியுள்ள போதும், இன்னும் அதிர்ச்சியில் இருந்து சிறுமி மீளவில்லை என பெற்ரோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பருந்தை விரட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










