யாழ் போதனாவுக்குள் மதுபோதையில் நுழைந்து அடாவடி..! வைத்தியசாலை ஊழியர் மீதும் தாக்குதல் :
[2024-05-29 17:50:25] Views:[11]
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அத்துமீறி உள்நுழைந்த வைத்தியசாலை ஊழியரை தாக்கிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் (27) இரவு 10.00 மணியளவில் காயமடைந்த ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.
வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து நேற்று (28) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகங்கள் இருவரையும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
காயத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மற்றும் சமபவத்தில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.










