சுமார் 23 கோடி பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் மீனவர்கள் கைது!
[2024-05-29 13:15:17] Views:[9]
கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கலத்தின் எச்சங்களுடன் (வாந்தியுடன்) இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மீனவர்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் கந்தகுளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.










