துரோகிப் பட்டத்துக்குப் பயந்து உண்மையை மறைக்க முடியாது : எம்.ஏ.சுமந்திரன்
[2024-05-28 13:17:52] Views:[10]
என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார்கள் எனப் பயந்து உண்மையை மறைக்க முடியாது. நேற்று (27) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன் எம்.பி
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் என்ன நடந்தது என்பது எல்லோரும் தெரிந்த விடயமே. யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை வெளிப்படையாகச் சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டவன் அல்லன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன் என்று ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் எம்.பி. கூறியிருந்தார்.
அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.










