சிறுவர்கள் இடையே பரவும் வைரஸ்..! எச்சரிக்கப்படும் பெற்றோர் :
[2024-05-28 13:09:53] Views:[10]
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுவர்கள் இடையே இன்ப்ளூயன்ஸா வைரஸ் (Influenza virus) பரவும் அபாயம் காணப்படுவதால் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நாட்களில் சிறுவர்கள் இடையே இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர்களில் இன்ப்ளூயன்ஸா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்.
மேலும் குளிர் காலத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் எனவும், குறித்த வைரஸ் பரவாமல் தடுக்க முகக் கவசங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
இன்ப்ளூயன்ஸா வைரஸ் என்பதால் தடுப்பூசிகள் இல்லை, எனவும் பரசிட்டமோல் (Paracetamol) மருந்தை அருந்தி, தண்ணீர் மற்றும் இயற்கையான திரவங்களை எடுத்துக் கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.










