ஆலய உண்டியலை உடைத்து திருடியவர் கைது..!
[2024-05-27 17:29:31] Views:[10]
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கோவிலில் உண்டியல்களை உடைத்து திருடிய ஒருவரை பொலிஸார் சைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போது அச்சுவேலி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருடப்பட்ட பணமும், குறடு, கம்பி, போலி திறப்புக்கள் உள்ளிட்ட சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.










