யாழ். நகரில் காணாமல் போன 32 மோட்டார் சைக்கிள்கள்..!
[2024-05-27 12:47:24] Views:[10]
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலயங்கள் மற்றும் கடைகளுக்கு செல்வோரின் மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு திருடப்படும் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளில் சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விசாரணைகளின் போது, திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது, அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள வேண்டியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்தி அவற்றுக்கு “ஹாண்டில் லொக்” போட்டு செல்லுமாறும், மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.










