'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழில் 322 பேருக்கு ஜனாதிபதி தலைமையில் காணி உறுதிபத்திரங்கள் கையளிப்பு:
[2024-05-25 12:20:44] Views:[10]
'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (24) மாலை ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 1286 பயனாளிகள் 'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிபத்திரங்களை பெருவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 322 பேருக்கு ஜனாதிபதி அடையாளமாக நேற்றய நிகழ்வின் போது காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ சுமந்திரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










