போயா தினத்தில் கசிப்பு விற்ற பெண் கைது!
[2024-05-25 07:26:56] Views:[12]
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் போயா தினமாகிய நேற்றைய தினம் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போயா தினமான நேற்று (24) மதுபானசாலைகள் மூடப்பட்ட நிலையில் கசிப்பு வியாபாரத்தில் பெண் ஒருவர் ஈடுபடுவதாக யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










