யாழில் மான் கொம்புடன் ஒருவர் கைது..!
[2024-05-25 06:08:23] Views:[11]
கிளிநொச்சியில் இருந்து மான் கொம்பை பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (24) யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










