yarlathirady.com

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது:

[2024-05-24 17:49:12] Views:[26]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டிடத் தொகுதி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் விஜயமாக இன்றையதினம் (24) வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.

இந்நிலையில், யாழ்.நகரில் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக நிர்வாகத்தினர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.