yarlathirady.com

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் கொழும்பில் கைது!

[2024-05-24 12:48:25] Views:[10]

இந்தியாவின் அகமதாபாத்தில் கடந்த (19) திகதி கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இலங்கை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுடனும் இந்நாடினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பில் தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தேக நபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சந்தேக நபர்களுக்கு விமான டிகெட் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளதாகவும், அவரை தொடர்ந்து பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் மற்றும் குறித்த அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பில் விரிவாக விசாரிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்தக் குழு இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.