யாழில் இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வு:
[2024-05-24 11:25:58] Views:[12]
யாழ்.நாக விகாரையின் வெசாக் தின நிகழ்வு நேற்று மாலை நாக விகாரையின் விகாராதிபதி சிறி விமலதேரர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நாகவிகாரையில் பூசை வழிபாடுகள் நடைபெற்று வெசாக் கூடுகள் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டன, இதில் பெருமளவான மக்கள் இன, மத வேறுபாடுகளை கடந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளு நர் பி.எச்.எம்.சாள்ஸ், யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, வடமாகாண கடற் படைத் தளபதி ரியர் அட்மிரல் ரோகித அபயசிங்க, பலாலி விமானப்படை தளபதி குறூப் கப்டன் சமிந்த ஹேரத், வடக்கு மாகாண பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவன், கடற் றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.










