வட மாகாணத்தில் 100 வருடங்களில் பதிவான அதிகூடிய மழை வீழ்ச்சி...!!
[2024-05-23 10:41:30] Views:[14]
கடந்த 100 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தின் காலநிலை வரலாற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சி இம் மாதத்தில் பதிவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழை வீழ்ச்சி 90MM ஆகும். மே மாத மழை நாட்கள் சராசரியாக 6 நாட்களே ஆகும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் முடிவடையாத நிலையில் மாகாண சராசரி என்ற வகையில் திங்கட்கிழமை வரை 230MM மழை கொட்டித் தீர்த்துள்ளது.
ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு பகுதி, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதி அதிக அளவிலான மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










