யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
[2024-05-22 10:57:21] Views:[13]
யாழ்ப்பாணத்தில் கடையொன்றில் வாங்கிய பாணுக்குள் கண்ணாடி பீங்கான் துண்டொன்று காணப்பட்டதாக பாதிக்கப்பட்ட வடிக்கையாளர் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
நேற்று (21) இரவு யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது.
குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்கள் வழங்கப்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.










