yarlathirady.com

இந்திய விமான நிலையத்தில் வைத்து ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் கைது!

[2024-05-21 14:26:24] Views:[10]

இந்தியா - குஜராத் விமான நிலையத்தில் வைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்ட 4 இலங்கையர்களை அந்நாட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அகமதாபாத்திற்கு வந்த நோக்கத்தை கண்டறியும் வகையில் இந்திய காவல்துறையினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சந்தேநபர்கள் திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கூடுதல் தகவல்களை கோரியுள்ளனர்.

இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.