ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இன்று துக்க தினமாக அறிவிப்பு:
[2024-05-21 07:32:26] Views:[10]
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நினைவு கூறும் வகையில் இன்று 2024.05.21ம் திகதி துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் இவ்வாறு துக்கத் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.










