மீண்டும் ஒத்திவைக்கபட்ட இலங்கை - இந்திய கப்பல் சேவை!
[2024-05-19 22:16:47] Views:[10]
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதி பெற வேண்டிய காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன், மே மாதம் 19 வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என குறித்த தனியார் படகுசேவை நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு மீளப்பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.










