யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு:
[2024-05-19 21:54:57] Views:[10]
15வது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை இராணுவத்தின் 114 அதிகாரிகள் மற்றும் 1,395 சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
போர் வீரர்களின் நினைவு தினமான இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து படைப்பிரிவு உறுப்பினர்களுக்கும் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.










