யாழில் வீசிய பலத்த காற்று! கோவில் கூரை முற்றாக சேதம்:
[2024-05-19 21:27:40] Views:[10]
நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் மழையுடன் வீசிய காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தில் உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










