yarlathirady.com

CSK மற்றும் RCB அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று...!!!

[2024-05-18 10:36:31] Views:[22]

IPL போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 அணிகள் பிளே ஓப் சுற்றிற்கு தகுதிபெறாமல் வெளியேறிவிட்டன. மேலும், பிளே ஓப் சுற்றிற்காக KKR மற்றும் RR அணிகள் ஏற்கனவே தகுதிப்பெற்றுள்ளன.

இந்நிலையில், மிகுதி இரண்டு இடங்களுக்கு எந்த அணி தகுதிப்பெறும் என தெரியாத நிலையில், முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்ற RCB அணி அடுத்த 5 போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்றுள்ளது.

CSK அணி முதல் 13 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்று +0.528 நிகர ஓட்டவிகிதத்துடன் உள்ளது.

RCB அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று +0.387 நிகர ஓட்டவிகிதத்துடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

CSK மற்றும் RCB அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி பிளே ஆப் சுற்றின் 4 ஆவது இடத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்நிலையில், CSK அணிக்கு எதிரான கடைசி போட்டியில், RCB அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ, CSKவை 5ஆவது இடத்திற்கு தள்ளி, RCB அணி 4ஆவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எனவே இது CSK அணிக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

CSK, RCB அணிகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் அணியே 4ஆவது இடத்தை பிடிக்கும். எனவே சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.