ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட கட்டிடம்
[2024-05-17 09:30:55] Views:[12]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ். நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 8 மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயமாக வருகைதரும் ஜனாதிபதி இம்மாதம் 24ஆம் திகதி குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை போன்ற வசதிகள் உள்ளன. கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய சுமார் 700 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










