யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
[2024-05-17 09:08:46] Views:[11]
யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், தாம் உடற்கல்வி துறையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தற்போது யாழ். மாவட்டத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்கள் போதியளவு இன்மை காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வெற்றிடங்களுக்கு தமக்கான நியமனங்களை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எதிர்வரும் வாரம் யாழ்ப்பாணத்தித்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் அவ்விடயம் குறித்து அவரிடம் நேரில் பிரஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்துதருவதாக அமைச்சர் கூறியிருந்ததுடன், நிரந்தர நியமனங்கள் கிடைக்கும்வரை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளது மாணவர்களின் விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்கு தன்னார்வ ரீதியில் உதவி செய்து உங்கள் திறமையுடன் மாணவர்களின் ஆற்றலையும் மேம்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.










