yarlathirady.com

கைமாறிய விஜயின் 'கோட்' திரைப்படம்: நடந்தது என்ன?

[2024-05-15 21:38:36] Views:[26]

சன் டிவி விதித்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்ளாததால் தான் ‘கோட்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவியில் இருந்து ஜீ டிவிக்கு கை மாறியதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி வாங்கியதாக முதலில் செய்திகள் வெளியான நிலையில் அதன் பிறகு இந்த படம் ஜி டிவிக்கு கை மாறிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற சன் டிவி சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அதில் ஒன்று சன் டிவிக்கு விஜய் இரண்டு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிபந்தனையை ஒரு வினாடி கூட தாமதம் செய்யாமல் விஜய் 'நோ’ என்று கூறி ஏற்க மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து ‘கோட்’ திரைப்படத்தின் உரிமையை சன் டிவி வாங்கவில்லை என்றும் அதனை அடுத்து தான் ஜி டிவிக்கு இந்த படத்தை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘கோட்’ படத்தை வாங்குவதாக இருந்தால் ரிலீஸ் செய்த ஒரு மாதத்திற்கு சன் டிவியில் ஒளிபரப்பி விடுவோம் என்றும், நாங்கள் சொல்லும் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும், அரசியல் சம்பந்தமான காட்சிகள் படத்தில் இருக்கக் கூடாது என்றும் சன் டிவி நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் இவை வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.