புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு
[2024-05-15 12:25:53] Views:[11]
மேலும் 5 ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய மத்திய அரசு நீடித்து அறிவித்தல் விடுத்துள்ளது.
1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததன் பின்னரே இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.










