யாழில் போலி இறப்பர் முத்திரை மூலம் பாரியளவில் நிதி மோசடி...!
[2024-05-15 09:21:33] Views:[13]
யாழ். கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயமொன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
மேற்படி குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலயத்தின் நிலையான வங்கி வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2023 ஐப்பசி மாதம் 10 இலட்சம் ரூபாவும், கடந்த 2024 தை மாதமளவில் 7 இலட்சம் ரூபாவும் போலியாக கூட்டறிக்கை தயாரித்தும், கலாச்சார உத்தியோகத்தரின் போலி இறப்பர் முத்திரையை தானகவே செய்தும் நெல்லியடி வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த பணத்தை பெற்றுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மல்லாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.










