yarlathirady.com

பெற்றோர்களே எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தாதீர்கள்

[2024-05-14 10:20:21] Views:[12]

நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்று என்னை சற்று கோபமடைய செய்ததுடன் எமது தமிழ் சமூகத்தின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. அதாவது எமது தாயகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வரும் வேளையில் வடக்கில் குறிப்பிட்ட பிரதேசத்தில் பாடசாலை அருகே மாணவர்களுக்கு கஞ்சி வழங்கப்படும் போது அதில் ஒரு மாணவனிடம் தாய் ஒருவர் கஞ்சி வழங்கும் வேளையில் அந்த மாணவனிடம் சில விளக்கங்களை தருகிறார். அதனைப் பார்த்தபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த தாய் தெரிவிக்கின்றார் அம்மாணவனிடம் "எம் இனம் அழிக்கப்பட்டது. எமது உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் . நாங்கள் உணவு கூட இன்றி அன்றைய காலத்தில் கஞ்சி மட்டுமே பருகினோம். அதனால் அதனை நினைவு கூறவே இவ்வாறு கஞ்சி வழங்குகின்றோம். இதை நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும் . எதிர்காலத்தில் நீங்களும் இதனை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். உண்மையில் அம் மாணவனிடம் இவ்வாறு கூறியமை சரியா எதிர்கால சந்ததியினராவது இந்நாட்டில் சாந்தி சமாதானத்துடன் வாழ வேண்டாமா ? சற்று யோசித்துப் பாருங்கள் இறந்த காலத்தை மீண்டும் மாற்றி அமைக்க முடியாது. கடந்த காலம் கடந்தது. அக்கசப்புணர்வுகளை தற்போது உள்ள சந்ததியினரிடம் முன்வைத்து மீண்டும் மீண்டும் எமது சமூகத்தை இருநோக்கி தள்ளவே இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.

இதனை ஏற்றுக் கொள்ள என் மனம் மறுக்கின்றது . என்னைப் போன்று நீங்களும் ஏனையவர்களும் அவ்வாறே உணரலாம் .உண்மையில் எமது தரப்பில் இழப்புகள் உண்டு நான் ஏற்றுக் கொள்கிறேன். எனினும் எதிர்கால சந்ததியினர் அதனை தெரிந்து கொண்டு சகோதர இனத்தவரின் மீது அவர்கள் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவார்கள் அல்லவா? இந்த வெறுப்புணர்வு காலப்போக்கில் இனவாதமாக மாறும். சற்று யோசித்துப் பாருங்கள் இவ்வாறானவைகளை நாம் நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

இந்நாடு அனைவருக்கும் உரியது. இங்கு தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் என்ற பேதம் இல்லை. அவ்வாறு எமது பிள்ளைகளை வழி நடத்துங்கள் .அவர்களை இந்த நாட்டில் நிம்மதியாக வாழ விடுங்கள். இவ்வாறான மோசமான விடயங்களை அவர்கள் மனதிற்கும் மூளைக்கும் கொண்டு செல்லாதீர்கள் .

தயவு செய்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 30 வருட காலத்தில் நாம் அனுபவித்தவை போதும். இப்போது 15 வருடங்கள் கடந்து விட்டன மீண்டும் மீண்டும்.பிஞ்சுகளின் மனதில் நஞ்சை கலக்காதீர்கள் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் உங்களில் ஒருவனாக


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.