யாழில் ஆபத்தான வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது..!
[2024-05-13 20:46:06] Views:[9]
யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரை பகுதியில் ஆபத்தான வெடிமருந்துகளை உடமையில் வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3 145 கிராம் வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் படியே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.










