யாழ். செல்வசந்நதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்
[2024-05-12 12:02:11] Views:[10]
கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயாவேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமதிற்கு பாதயாத்திரை செல்வதற்குத் தயாராக இருக்கின்றனர்
வடக்கு,கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 48 நாட்களில் 98 ஆலயங்களை தரிசித்து 815KM தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிக நீண்ட தூர பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
கடந்த 23 வருடங்களாகச் சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமகந்தன் ஆலய கொடியேற்ற தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.
மே 11ஆம் திகதி அதிகாலை நடைபெற்ற விசேட பூஜையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயாவேல்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பித்து வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஜெயாவேல்சாமி அணியில் பயணிக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பக்தர்களுடன் மீண்டும் பாதயாத்திரை இடம்பெறும்.










