எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகள்
[2024-05-12 11:21:59] Views:[12]
எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் திட்டமிடப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனமானது தீர்மானித்துள்ளது.
லங்கா சதொச விசேட விலைக்கழிவுகளைப் பெறுவதற்கு அந்தந்தப் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்காளை முன்பதிவு செய்ய எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள லங்கா சதொச கிளைக்கு வழங்குமாறு லங்கா சதொச நிறுவனமானது அறிவித்துள்ளது.










