yarlathirady.com

இன்று முதல் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு

[2024-05-10 21:38:50] Views:[13]

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.

குறித்த நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நேர்முகத் தேர்வுகள் 10,11,13 மற்றும் 20ஆம் திகதிகளில் பத்தரமுல்லையில் உள்ள பொருளாதார கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளன. இந்த ஆட்சேர்ப்புகள் 2021 டிசம்பர் 12 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் முடிவுகளின்படி செய்யப்படுகின்றன.

தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் என்பன கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.govlk இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(c) இல் டிப்ளோமா பெற்றவர்களை சேர்த்து கொள்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.