கடல் வெப்பநிலை அதிகரித்து பவளப்பாறைகள் அழிவடையும் அபாயம்...!
[2024-05-09 20:42:51] Views:[15]
நாட்டில் மேலும் ஒரு மாத காலம் வெப்பநிலை நீடித்தால் இலங்கை கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிவடையலாம் என சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி கே.அருளானந்தன் அறிவித்துள்ளார்.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கடலில் வெப்பநிலை 31°C ஆக அதிகரித்து, பவளப்பாறைகள் நிறத்தை இழந்து அழிவடையும் வாய்பு அதிகம் என குறிபிட்டுள்ளார்.
பவளப்பாறைகள் உருவாக கடலின் வெப்பநிலை 27-28°C வரை இருக்க வேண்டும். கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்கும்.
பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.










