yarlathirady.com

தாதியர்கள் மற்றும் சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்...!

[2024-05-09 11:41:21] Views:[10]

நாட்டில் தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார்.

ஓய்வுபெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எம்.பி காமினி வலேபொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

தாதியர்களின் ஓய்வுபெறும் வயதை 61 வயதிற்கு மேல் நீடிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார சேவைகளுக்கு புதிதாக 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள 1,000 வெற்றிடங்களை நிரப்பவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.