முல்லையின் வீரமங்கை பட்டம் அளித்து சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு கெளரவிப்பு
[2024-05-09 11:15:35] Views:[11]
மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த சாதனை படைத்த அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08) முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது வயதில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று சாதனை படைத்து நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இலங்கையில் சாதனை மங்கையாக காணப்படும் இவருக்கு முள்ளியவளை மக்கள் சார்பாக முல்லையின் வீரமங்கை என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரை நிழக்த்திய முல்லையின் வீரமங்கையான அகிலத்திருநாயகி தான் 246 பதக்கங்களுக்கு மேல் விளையாடி பெற்றுள்ளதாகவும், கடந்த வாரமும் கண்டியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியிலும் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










