பகல் இரண்டு மணிக்குப்பின் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு..!
[2024-05-09 10:39:45] Views:[13]
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 02 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் 75ml மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரித்துள்ளது.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20‐30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பகுதியில் ஓரளவு கொந்தளிப்பான நிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.










