ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு...!
[2024-05-08 11:12:39] Views:[12]
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள், பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 2021 டிசம்பர் 12 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சை முடிவுகளின்படி ஆங்கிலப் பாடத்திற்கான நேர்காணல்கள் இடம்பெறவுள்ளன.
மே மாதம் 10, 11, 13 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நேர்காணலுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.










