தாயின் கழுத்தை நெரித்து கொன்ற 16 வயது மகன்...!
[2024-05-07 11:36:34] Views:[13]
தெல்லிப்பழை, துர்க்காபுர பிரதேசத்தை சேர்ந்த கனடி ஜஸ்மின் (வயது-37) என்ற பெண் கடந்த 4ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தானே கழுத்தை நெரித்துக் கொன்றதாக அந்தப் பெண்ணின் மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட பின்னர், அவருடைய 16 வயது மகனைக் காணவில்லை என தெரிவித்த பொலிஸார் காணாமற்போனவரை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் நேற்று(06) சரணடைந்த அந்த நபர், தனது தாயாரின் கழுத்தை தான்தான் நெரித்துக் கொன்றதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பெண்ணின் உடலில் அளவுக்கதிகமான மாத்திரைக் கூறுகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.










