வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோர்வே...!
[2024-05-07 09:33:36] Views:[12]
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது ,வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கல்வி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் உறுதியளித்துள்ளார்.










