யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் கைகோர்த்து அபிவிருத்தி செய்ய திட்டம்...!
[2024-05-06 19:36:43] Views:[11]
யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் கைகோர்த்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் யாழ் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடம் இருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன என அமைச்சின் செயலாளர் K D S ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் விரைவில் இதற்கான யோசனை தயாரிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K D S ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.










