கடைக்குள் புகுந்த பேருந்து! பலர் வைத்தியசாலையில்:
[2024-05-06 10:41:15] Views:[18]
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று இன்று (06) அதிகாலை செங்கலடி சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்துக் கொண்டு கடையொன்றிட்குள் புகுந்ததில் குறித்த கடை முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










