எச்சரிக்கையை மீறி கடலில் நீராடச்சென்றதால் நேர்ந்த அனர்த்தம்...!
[2024-05-05 11:56:39] Views:[10]
நேற்றைய தினம் வெலிகம கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் இரண்டு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தில் வெலிகம, கொலெதந்த பகுதியைச் சேர்ந்த அப்துல் பாஷித் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 6ஆம் திகதி வரை கடலில் நீராடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.










