yarlathirady.com

யாழில் சட்டவிரோதமாக இயங்கிய கொல்கலன் சுற்றிவளைப்பு! இறைச்சியுடன் ஒருவர் கைது:

[2024-05-05 10:46:41] Views:[10]

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுவந்த கொள்கலன் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சியுன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி வீதியில் உள்ள பாலடைந்த கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு, ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவல்களை அடுத்து, குறித்த இடத்தை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

அதன்போது அக்கட்டடத்தில் இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நபரை கைது செய்ததுடன், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 21 மாடுகள் மற்றும் 04 ஆடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சி மற்றும் இறைச்சியாக்க பயன்படுத்திய கோடாரி , கத்திகள் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.