துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட கடற்படை சிப்பாய்..!
[2024-05-04 11:35:28] Views:[10]
முழங்காவில் கடற் படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த சிப்பாய் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மைத்திரிகம, சிரிபுர பகுதியைச் சேர்ந்த தனுஸ் கயான் பிரேமரத்ன என்ற கடல்படை சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த இச்சம்பவம் தொடர்பாக முழங்காவில் போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










