அச்சுவேலியில் தொடரும் பெட்ரோல் குண்டு தாக்குதல்..!
[2024-05-03 16:32:12] Views:[12]
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள மூன்று வீடுகள் மீது தொடர்ந்து வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு மற்றும் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தால், வீட்டிற்கு பெரியளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் இரவு அச்சுவேலி, சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு மற்றும் கல் வீச்சு தாக்குதல் நடத்திய குற்றத்தில் சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார கால பகுதிக்குள் அச்சுவேலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள நான்கு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி, முதியவர் ஒருவருக்கு காயமோற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
இந்நிலையில் வன்முறை கும்பல்களில் அட்டகாசங்களை கட்டுப்படுத்த பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










