yarlathirady.com

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது! படகுகளும் கைப்பற்றப்பட்டன:

[2024-05-03 09:58:53] Views:[10]

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று (02) வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது அவர்கள் பயன்படுத்திய மூன்று படகுகள், வலைகள் உட்பட பல உடமைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒளி பாய்ச்சி சுருக்குவலை வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கட்டைக்காட்டை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக அவர்களை உடமைகளுடன் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.